×

அன்னை தமிழில் அர்ச்சனை, வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்: பக்தர்கள் வரவேற்பு

சென்னை: அன்னை தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.  தமிழகத்தில் முதற்கட்டமாக 47 கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பேரில், கபாலீஸ்வரர் கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய உள்ள விவரம் குறித்த பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3ம் தேதி வெளியிட்டார். இதை தொடர்ந்து கபாலீஸ்வரர் கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் கடந்த 5ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த நிலையில், அன்னை தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், ஆணையர் ஜெ. குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வர் மு.க. ஸ்டாலின், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ செய்யவிருக்கும் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகையை 3.8.2021 அன்று வெளியிட்டார். முதற்கட்டமாக, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களில் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு, தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழில் வழிபட வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” எனும் கொள்கையில் திளைத்த தமிழ் அறிந்த பெருமக்கள் மற்றும் பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க, தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இறைவனின் பெருமைகளையும் பதிகம் மற்றும் பாடல்களால் உயர்வாக ‘ஒப்புமை செய்து’ போற்றுவதற்கு போற்றி நூல்கள் வழிவகுக்கும்.இந்த முயற்சியின் மூலம், கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தாம் அறிந்த தமிழ் மொழி மூலம் அர்ச்சனை என்பதால் அகமகிழ்வார்கள். அறிந்த மொழியில் அர்ச்சனை செய்வதை ஊக்குவிக்கவும், அர்ச்சகர் சொல்வதைப் பக்தர்கள் புரிந்து கொள்வதற்காகவும் இந்தப் போற்றி நூல்கள் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அன்னை தமிழில் அர்ச்சனை, வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்: பக்தர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : M.K.Stalin ,Chennai ,Chief Minister ,God ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...